/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 16, 2025 01:55 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
போக்குவரத்து ஊழியர்கள் ஓய்வுபெற்று ஓய்வூதியத்துக்கான பணப்பலன் கடந்த, 25 மாதமாக நிலுவையில் உள்ளது.
இதை வழங்கக்கோரி, மாநில அளவில், 20 இடங்களில் நடக்கும் போக்குவரத்து ஓய்வூதியர்கள் போராட்டத்திற்க்கு ஆதரவாக, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத்தலைவர் சிவப்பிரகாஷ் தலைமை வகித்தார். பாரதி, தண்டபாணி, சகுந்தலா, சுபாஷ்சந்திரபோஸ், ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நந்தகுமார் கோரிக்கை விளக்கி பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.