/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
/
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்
ADDED : செப் 24, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி :கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மாலை நேர தர்ணா போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் சந்திரன் தலைமை வகித்தார். பொருளாளர் நந்தகுமார், வட்டார தலைவர் சிவபிரகாசம், செயலாளர் பெருமாள் உள்பட பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், பி.எப்.ஆர்.டி.ஏ., ஓய்வூதிய நிதி ஆணையத்தை களைக்க வேண்டும். அனைத்து சந்தாதாரர்களையும் இ.பி.எஸ்., 95ன் கீழ் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தின் கீழ் கொண்டு வர வேண்டும். 8வது ஊதியக்குழுவை உடன் அமைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். கான்ட்ராக்ட், அவுட் சோர்ஸ், தினக்கூலி பணி நியமனங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
அவ்வாறு பணி நியமனம் செய்தவர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். அனைத்து மாநில அரசுகளும், பொதுத்துறை நிறுவனங்களும் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கப்படுவதை, கார்ப்ரேட் நிறுவனங்களாக்குவது மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட, 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.