sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

'எம்.எல்.ஏ.,க்களை பயன்படுத்தி கொள்ளாத அரசு' கொ.ம.தே.க., ஈஸ்வரன் வருத்தம்

/

'எம்.எல்.ஏ.,க்களை பயன்படுத்தி கொள்ளாத அரசு' கொ.ம.தே.க., ஈஸ்வரன் வருத்தம்

'எம்.எல்.ஏ.,க்களை பயன்படுத்தி கொள்ளாத அரசு' கொ.ம.தே.க., ஈஸ்வரன் வருத்தம்

'எம்.எல்.ஏ.,க்களை பயன்படுத்தி கொள்ளாத அரசு' கொ.ம.தே.க., ஈஸ்வரன் வருத்தம்


ADDED : டிச 16, 2024 04:06 AM

Google News

ADDED : டிச 16, 2024 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: ''எம்.எல்.ஏ.,க்கள் உழைக்க தயாராக இருந்தும், அதை, தி.மு.க., அரசு பயன்படுத்தி கொள்ளவில்லை,'' என்று, கொ.ம.தே.க., பொது செயலாளரும் எம்.எல்.ஏ.,வுமான ஈஸ்வரன் கூறினார்.

கிருஷ்ணகிரியில் கொ.ம.தே.க., மாவட்ட தலைவர் அண்ணா-துரை தலைமையில் நேற்று நடந்ந பொதுக்குழு கூட்டத்தில் பங்-கேற்ற ஈஸ்வரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக அரசு அறிவித்துள்ள, ஓசூர் விமான நிலையத்தை துரித-மாக செயல்படுத்த வேண்டும். விவசாய உற்பத்தி சார்ந்த பொருட்களுக்கான தனி பகுதியாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இந்த தொழிற்சாலைகளில், மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

தமிழக அரசை பொருத்தவரை, முதல்வரிடம் நாங்கள் வைக்-கின்ற கோரிக்கை, எம்.எல்.ஏ.,க்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பதுதான். மூன்றரை ஆண்டுகளாக நான் எம்.எல்.ஏ.,வாக இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். உழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் முழுமையாக பயன்ப-டுத்தவில்லை; அதுதான் உண்மை. முதல்வர் ஸ்டாலின் குறைந்த-பட்சம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது எம்.எல்.ஏ.,க்களை நேரில் அழைத்து பேச வேண்டும்.

வெள்ள பாதிப்பு, அரசின் முன்னெடுப்பையும் தாண்டி நடந்துள்-ளது. ஊத்தங்கரையில் பெய்த மழை, சென்னையில் பெய்தி-ருந்தால் பிரச்னையாகி இருக்கும். கடந்த கால பாதிப்புகளை வைத்து, முன்னெடுப்புகளை அரசு செய்துள்ளது. ஆனால், நிவா-ரணம் எல்லா மக்களையும் சென்று சேரவில்லை என்பது உண்-மைதான். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us