/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பண்பாட்டு கழக நிர்வாகிகள் கூட்டம்
/
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பண்பாட்டு கழக நிர்வாகிகள் கூட்டம்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பண்பாட்டு கழக நிர்வாகிகள் கூட்டம்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பண்பாட்டு கழக நிர்வாகிகள் கூட்டம்
ADDED : செப் 09, 2025 01:56 AM
கிருஷ்ணகிரி, ஊத்தங்கரையில், முல்லை நில அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பண்பாட்டு கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பண்பாட்டு கழக மாநில செயலாளர் தஞ்சை அடைக்கலம் தலைமை வகித்தார். மாநில இணை செயலாளர் சண்முகம் யாதவ், மாவட்ட கவுரவ தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பண்பாட்டு கழக செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார்.
மாநில இணை பொதுச்செயலாளர் சேது மாதவன், மாவட்ட தலைவர் ரவி, பேராசிரியர் சிவராஜ், முனைவர் ஆண்டவர், சமூக செயற்பாட்டாளர் வீரா மோகன் ஆகியோர் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான, 9 மாணவர்களை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை விரைவாக முடித்து, பிப்., அல்லது மார்ச் மாதம் பண்பாட்டுக்கழக பொதுக்குழு கூட்டம் நடத்தி, அதன் விபரத்தை அனைத்து மாவட்ட செயலாளர்களும் தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிடுமாறும், தமிழ்நாடு அரசு தேர்வாணைய குழுவில் யாதவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்குமாறும், தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.