/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தொலைதுார மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆட்டோ வசதி
/
தொலைதுார மாணவர்களுக்கு அரசு சார்பில் ஆட்டோ வசதி
ADDED : ஜூன் 13, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் அடுத்த ஜெகதாப் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கிராம பகுதிகள் மற்றும் தொலை துாரத்திலிருந்து, 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் வருகின்றனர். அவர்களின் வசதிக்காக, தமிழக அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை மூலம், ஆட்டோ போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஜெகதாப் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து மாணவ, மாணவியரை ஆட்டோவில் அழைத்து செல்லும் வசதி துவங்கப்பட்டது. வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் காவேரி, தலைமை ஆசிரியை ஜீவரத்தினம், முன்னாள் பஞ்., தலைவர் கன்னியம்மாள் உள்ளிட்டோர் ஆட்டோ மூலம் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவியரை வரவேற்று அழைத்து சென்றனர்.