/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயியை கத்தியால் குத்திய வழக்கு அரசு பள்ளி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை

ADDED : டிச 08, 2024 03:59 AM
ஓசூர்: ராயக்கோட்டை அருகே, விவசாயியை கத்தியால் குத்திய வழக்கில், அரசு பள்ளி ஆசிரியருக்கு, 7 ஆண்டுகள் சிறை தண்-டனை வழங்கி, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே கருக்கனஹள்-ளியை சேர்ந்தவர் முருகேசன், 76. விவசாயி; அதே பகுதியை சேர்ந்தவர் முனிராஜ், 55. போடம்பட்டி அரசு பள்ளியில் ஆசிரிய-ராக பணியாற்றி வந்தார்.
நண்பர்களான இருவருக்கும் இடையே கடந்த, 2021 பிப்., 26 ல், பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த முனிராஜ், விவசாயி முருகேசனை கத்-தியால் குத்தினார். இது தொடர்பாக, முருகேசன் மகன் சந்திர-சேகர், 42, புகார் படி, ராயக்கோட்டை போலீசார், முனிராஜ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிந்தனர்.இந்த வழக்கு, தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி அரிஹரன், குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர் முனிராஜிற்கு, 7 ஆண்டுகள் சிறை தண்ட-னையும், 5,000 ரூபாய் அபராதமும், அபராதத்தை கட்ட தவ-றினால் மேலும், 6 மாத சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்ப-ளித்தார்.
இதையடுத்து, வேலுார் சிறையில் முனிராஜ் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரநாத்
ஆஜராகினார்.