/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆலோசனை கூட்டம்
/
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆலோசனை கூட்டம்
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆலோசனை கூட்டம்
அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 20, 2024 02:23 AM
கிருஷ்ணகிரி: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கிருஷ்ணகிரியில், கிளை பேரவை ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது. மாநிலக்குழு உறுப்பினர் குணசே-கரன் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கர்சன் துவக்கி வைத்து பேசினார்.
கூட்டத்தில், பணி ஓய்வு பெற்று, 2 ஆண்டுகளாகியும் வழங்கா-மலுள்ள ஓய்வுகால பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். 9 ஆண்டுகளாக, 95,000 ஓய்வு பெற்றவர்களின் வாழ்-வாதாரமான பஞ்சப்படி உயர்வை வழங்க வேண்டும். போக்குவ-ரத்து ஓய்வூதியர்களுக்கான உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்தரவு-களை நிறைவேற்ற வேண்டும். முதல்வரின் விரிவான மருத்துவ திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிதி பொறுப்பாட்சி ஓய்வூ-திய திட்டத்தை அரசே நடத்த வேண்டும். 25 ஆண்டுகளுக்கு மேலாக வழங்காமலுள்ள ஓய்வூதிய உயர்வுகளையும், பணியில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு கல்வித்தகுதி அடிப்படையில் வாரிசு வேலையும் வழங்க வேண்டும். 2003 ஏப்., 1க்கு பின் பணியில் சேர்ந்தவர்களையும் பென்சன் திட்டத்தில் இணைக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணி அமர்த்தக் கூடாது. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெறும் அன்றே பணப்பலன்களை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல தீர்-மானங்கள் நிறைவேற்றப்பட்டது.தர்மபுரி மண்டல தலைவர்கள் குப்புசாமி, முனுசாமி உள்பட பலர் பேசினர்.