/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்லப்படும் கிரானைட் கல்
/
பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்லப்படும் கிரானைட் கல்
பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்லப்படும் கிரானைட் கல்
பாதுகாப்பற்ற முறையில் லாரிகளில் எடுத்து செல்லப்படும் கிரானைட் கல்
ADDED : டிச 20, 2024 12:51 AM
போச்சம்பள்ளி, டிச. 20-
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, நாகரசம்பட்டி, வேலம்பட்டி, விளங்காமுடி, எருமாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு கிரானைட் கல்குவாரிகள் செயல்படுகின்றன. விளங்காமுடியிலுள்ள கிரானைட் கல்குவாரிலிருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் கனரக லாரிகளில், பக்கவாட்டில் எவ்வித தடுப்புகளும் இன்றி, பாதுகாப்பற்ற முறையில் வைத்து, வேலம்பட்டி மூன்று ரோடு சந்திப்பு வழியாக, ஜெகதேவியிலுள்ள கிரானைட் கம்பெனிகளுக்கு எடுத்துச் செல்கின்றனர்.
வேலம்பட்டி மூன்று ரோடு சந்திப்பில், மாலை நேரங்களில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கவும், மற்ற அத்தியாவசிய பணிகளுக்காகவும் வந்து செல்கின்றனர். அதேபோல் அரசு உயர்நிலைப் பள்ளி, தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியர், 700க்கும் மேற்பட்டோர் பள்ளி முடிந்து வீட்டிற்கு திரும்பிச் செல்லும் நேரத்தில், அதிகளவு நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது.
அந்த நேரத்தில் பாதுகாப்பற்ற முறையில், கனரக வாகனத்தில் கிரானைட் கற்களை ஏற்றிச் செல்வதால், மக்கள் கடும் அச்சத்தில் சாலையை கடந்து செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் முன், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள், பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.