/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை
/
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை
கிருஷ்ணகிரி நகராட்சியில் ரூ.2.47 கோடி மதிப்பில் நலத்திட்ட பணிக்கு பூமி பூஜை
ADDED : ஜூன் 14, 2025 06:52 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகராட்சியில், 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது.
கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட, பழையபேட்டை காந்திசிலை அருகே சின்ன ஏரி கழிப்பறை புனரமைத்தல், நகராட்சி நடுநி-லைப்பள்ளி கலையரங்கம் கட்டுதல், கிருஷ்ணகிரி நகர் நல மையம் சுற்றுச்சுவர் உள்ளிட்ட, 11 பணிகளுக்கு நகராட்சி பொது நிதியிலிருந்து, 83 லட்சம் ரூபாய் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மேசை நாற்காலி, கிருஷ்ணகிரி டி.பி., சாலை, தர்மராஜா கோவில் தெரு, சீனிவாசா காலனியில் தார்-சாலை அமைத்தல் உள்ளிட்ட, 8 பணிகளுக்கு, 15வது மானிய நிதியில், 1.63 கோடி என மொத்தம், 2.47 கோடி ரூபாய் மதிப்பி-லான நலத்திட்ட பணிகளுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. நக-ராட்சி தலைவர் பரிதா நவாப் தலைமை வகித்தார். நகராட்சி கமி-ஷனர் ஸ்டான்லி பாபு முன்னிலை வகித்தார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்து பேசுகையில், 'நகராட்-சிக்குட்பட்ட, 19 பணிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைந்து முடித்திட வேண்டும்,' என்றார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலு-மணி, நகராட்சி துணைத் தலைவர் சாவித்திரி, கவுன்சிலர்கள் ஜெயக்குமார், பாலாஜி, சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்-டனர்