/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
/
குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
குந்தாரப்பள்ளி சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா
ADDED : பிப் 28, 2024 02:28 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
அருகே, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மற்றும்
சி.பி.எஸ்.இ., பள்ளியின், 27வது ஆண்டு விளையாட்டு விழா மற்றும் பள்ளி
ஆண்டு விழா நடந்தது. இதில், மாணவ, மாணவியருக்கு நடத்தப்பட்ட
விளையாட்டு மற்றும் தடகள போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு
பரிசளிப்பு விழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
பள்ளி
நிறுவனர் அன்பரசன் தலைமை வகித்தார். தாளாளர் சங்கீதா அன்பரசன்
வரவேற்றார். தனியார் பள்ளி கூட்டமைப்பின் மாநிலத்தலைவர் நந்தகுமார்
முன்னிலை வகித்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் ரமணன், சி.பி.எஸ்.இ., பள்ளி
முதல்வர் ஷர்மிளா ஆகியோர் ஆண்டறிக்கை வாசித்தனர்.
நிகழ்ச்சியில்,
சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டி, சுட்டி அரவிந்த், அஜார், டி.எஸ்.கே.,
ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் பள்ளியில், அதிக
மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவியருக்கு கேடயம் மற்றும் பாராட்டு
சான்றிதழ்களை வழங்கினர். தொடர்ந்து மாணவ, மாணவியரின்
கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி மேலாளர் பூபேஷ் நன்றி கூறினார்.

