ADDED : ஆக 16, 2026 02:14 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: ஓசூர், ஹட்கோ எஸ்.ஐ., அறிவழகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் பாகலுார் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்-டனர்.
அப்போது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனையிட்டனர். சந்தேகத்திற்கிடமாக ஒருவர் வைத்திருந்த பையை சோதனையிட்டதில், 30 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை இருந்தது தெரிந்தது. விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தை சேர்ந்த சோழராஜன், 39, என்பதும், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் புகையிலை பொருட்கள் வாங்கி தஞ்சாவூரில் விற்பனை செய்வதற்காக கொண்டு சென்றதும் தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்-தனர்.
