ADDED : ஆக 16, 2026 02:14 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டையை சேர்ந்தவர் குப்பன், 59, பெங்களூருவில் தங்கி, செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், நேற்று காலை தன் மகள் கவிதா, 38, என்பவருடன் பர்கூரில் இருந்து ஜோலார்பேட்-டைக்கு ஹோண்டா டியோ ஸ்கூட்டரில் சென்றார். காலை, 9:00 மணியளவில், பர்கூர் தீயணைப்பு நிலையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாலையோர இரும்பு தடுப்பில் மோதியதில் குப்பன் பலியானார். அவரது மகள் கவிதா படுகாயங்களுடன் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
