ADDED : ஏப் 29, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆம்னி பஸ்சில் குட்கா பறிமுதல்
ஓசூர்:
ஓசூர், சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார், சிப்காட் ஜங்ஷன் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனை செய்தனர். பெங்களூருவில் இருந்து, மதுரை நோக்கி சென்ற ஆம்னி பஸ்சை நிறுத்தி சோதனை செய்தபோது, 67,200 ரூபாய் மதிப்புள்ள, 123 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.
இதனால், பஸ்சை ஓட்டி வந்த, சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே கலர்பட்டியை சேர்ந்த டிரைவர் குணசேகரன், 40, என்பவரை கைது செய்த போலீசார், புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். ஆம்னி பஸ் மேலாளரான, பெங்களூரு ஜெயா நகரை சேர்ந்த முகமது சாதிக், 24, மீது, போலீசார்
வழக்குப்பதிந்துள்ளனர்.