/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சேலம் பூம்புகார் விற்பனை நிலையம் சார்பில் ஓசூரில் கைவினை பொருட்கள் கண்காட்சி

ADDED : டிச 06, 2025 03:19 AM
ஓசூர்: சேலத்திலுள்ள தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழ-கத்தின், பூம்புகார் விற்பனை நிலையம் உள்ளது. இதன் சார்பில், கைவினை கலைஞர்களுக்கு, சந்தை வாய்ப்பை உருவாக்கும் வகையில், நேரடி விற்பனை மற்றும் கண்காட்சி, ஓசூர் மீரா மகால் திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.
ஓசூர் சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வரும், 14ம் தேதி வரை விற்பனை மற்றும் கண்காட்சி நடக்கிறது. இதில், கைவினை கலை பொருட்கள், கைத்தறி துணி வகைகள், அலங்கார நகைகள், சுவாமி மலை பஞ்சலோக சிலைகள், நாச்சியார் கோவில் பித்தளை குத்துவிளக்குகள், தஞ்-சாவூர் கலை தட்டுகள், ஓவியங்கள், வெண்மர, சந்தன மர சிற்-பங்கள், சந்தன கட்டைகள், சென்ன பட்டனா, காகித கூழ் பொம்-மைகள், சுடிதார், பேன்சி ஆடைகள் உட்பட பல்வேறு பொருட்கள் இடம் பெற்றுள்ளன. முத்து, பவளம், நவரத்தின மாலைகள், ராசிகற்கள், படிக மணிமாலைகள், ருத்ராட்சம், கருங்-காலி மாலைகள், பஞ்சலோக நகைகள் போன்றவை உள்ளன. மேலும், 50 முதல், 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. 10 லட்சம் ரூபாய் வரை, விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து பொருட்-களுக்கும், 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுவதாக, பூம்புகார் மேலாளர், நரேந்திர போஸ் தெரிவித்துள்ளார்.