/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மன அழுத்தத்தை குறைக்க குடும்ப விழா போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி
/
மன அழுத்தத்தை குறைக்க குடும்ப விழா போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி
மன அழுத்தத்தை குறைக்க குடும்ப விழா போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி
மன அழுத்தத்தை குறைக்க குடும்ப விழா போட்டிகளில் பங்கேற்று மகிழ்ச்சி
ADDED : செப் 07, 2025 12:50 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை உட்கோட்டத்தில் உள்ள தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, உத்தனப்பள்ளி, ராயக்கோட்டை மற்றும் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் ஸ்டேஷனில் பணியாற்றும் போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், காவலர் தினமான நேற்று குடும்ப விழா நடத்த மாவட்ட எஸ்.பி., தங்கதுரை உத்தரவிட்டார்.
அதன்படி, தேன்கனிக்கோட்டையில் நடந்த விழாவை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் துவக்கி வைத்தார். வாலிபால், கபடி, கிரிக்கெட், மியூசிக்கல் சேர், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற போலீசார் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் கணேஷ்குமார், புவனேஸ்வரி, பெரியதம்பி, சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல், மத்திகிரியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில், ஓசூர் உட்கோட்டத்தில் உள்ள ஓசூர் டவுன், சிப்காட், ஹட்கோ, மத்திகிரி, பாகலுார், பேரிகை, சூளகிரி, நல்லுார், ஓசூர் அனைத்து மகளிர் போலீசார் பங்கேற்ற குடும்ப விழா நடந்தது. ஓசூர் கூடுதல் எஸ்.பி., சங்கர், ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் வாகரே துவக்கி வைத்தனர். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. இன்ஸ்பெக்டர்கள் முத்தமிழ் செல்வராசன், சுப்பிரமணியம், நாகராஜ், குணசேகரன், பங்கஜம் உட்பட பலர் பங்கேற்றனர். போலீசார் மற்றும் குடும்பத்தினருக்கு மாலையில் உணவுகள் பரிமாறப்பட்டன.