/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வைக்கோல் லாரி தீயில் எரிந்து நாசம்
/
வைக்கோல் லாரி தீயில் எரிந்து நாசம்
ADDED : டிச 24, 2024 11:44 PM
ஓசூர்:கர்நாடகா மாநிலம், மைசூருவில் இருந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்திற்கு வைக்கோல் லோடு ஏற்றிய, 'ஈச்சர்' லாரி வந்தது. நெடுங்கல் அருகே மோட்டூர் கிராமத்தை சேர்ந்த பழனி, 31, என்பவர் லாரியை ஓட்டினார்.
ஓசூர் ஜூஜூவாடி, தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது லாரி வந்தபோது, நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:45 மணிக்கு, லாரியில் இருந்த வைக்கோலில் தீப்பிடித்தது. இதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து கூறியதால், ஈச்சர் லாரி டிரைவர் பழனி, லாரியை நிறுத்தி விட்டு கீழே குதித்து தப்பினார்.
ஓசூர் தீயணைப்பு துறையினர் வந்து, நேற்று அதிகாலை, 3:30 மணி வரை போராடி தீயை அணைத்தனர். ஆனாலும், லாரி மற்றும் வைக்கோல் முழுதும் எரிந்து நாசமாயின. இந்த தீ விபத்தால், கர்நாடகாவிலிருந்து தமிழகம் வந்த வாகனங்கள் சர்வீஸ் சாலையில் திருப்பி விடப்பட்டன. தீயை அணைத்து லாரியை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்து சீரானது.
ஓசூர் சிப்காட் போலீசார், தீ விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.