ADDED : ஆக 10, 2025 01:27 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷன் தலைமை காவலர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரியில், ஆனந்த் நகரை சேர்ந்தவர் விஜய், 47. போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் மாலை, 5:30 பணி முடித்து விட்டு, தன் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், ராயக்கோட்டை மேம்பாலம் பகுதி வழியாக, வீடு திரும்பி கொண்டிருந்தார். திடீரென மயக்கமடைந்து, சாலையோரம் தடுமாறி கீழே விழுந்தார். அங்கிருந்த அவரின் உறவினர் ஒருவர், அவரை மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
உயிரிழந்த தலைமை காவலர் விஜயின் உடல், அவரின் சொந்த ஊரான போச்சம்பள்ளி அடுத்த, சென்றாயம்பட்டியிலுள்ள அவரது தோட்டத்தில், நேற்று மாலை, 4:00 மணிக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன், 21 குண்டுகள் முழங்க அடக்கம்
செய்யப்பட்டது.