ADDED : ஆக 10, 2025 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரியில், ஆனந்த் நகரை சேர்ந்தவர் விஜய், 47. போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில், தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு பணி முடித்து விட்டு, தன் 'டி.வி.எஸ்., விக்டர்' பைக்கில், ராயக்கோட்டை மேம்பாலம் பகுதி வழியாக, வீடு திரும்பி கொண்டிருந்தார். திடீரென மயக்கமடைந்து, சாலையோரம் தடுமாறி விழுந்தார். கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.