ADDED : அக் 28, 2025 01:21 AM
கிருஷ்ணகிரி, ஓட்சா ஊராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில், சுகாதார ஊக்குனர் பிரிவு, கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் நாகமலை தலைமையில், 20க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதார இயக்குனர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கப்படவில்லை.
கடந்த 2024 ஜன., 4, ஊரக வளர்ச்சித்துறை கமிஷனர் அரசாணைப்படி சுகாதார உறுப்பினர்களுக்கு, பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வரும், தொகுப்பு ஊதியம் கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார ஊக்குனர்களுக்கு வழங்கப்படுவதில்லை. கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், தளி, சூளகிரி, ஊத்தங்கரை வேப்பனஹள்ளி பகுதிகளில் பணிபுரியும் சுகாதார உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடந்த, 2024 முதல் வழங்காமல் உள்ள தொகுப்பூதியத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

