ADDED : ஆக 11, 2025 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூர்: அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. நேற்று மாலை, 5:00 மணி முதல், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார், தீர்த்தமலை, பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்துார், மோளையானுார் மற்றும் சுற்று வட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலக்கோட்டில் நேற்று மாலை பெய்த ஒரு மணி நேர கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். -மழை நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

