/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உயரழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் சேதம்
/
உயரழுத்த மின் வினியோகம் மின்சாதன பொருட்கள் சேதம்
ADDED : ஏப் 27, 2025 03:57 AM
சூளகிரி: சூளகிரி அருகே, பீரேபாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. நேற்று காலை நேரத்தில் அக்கிராமத்தில் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டதால், மின்விசிறி, 'டிவி' பிரிட்ஜ், மின் மோட்டார்கள், 'சிசிடிவி' கேம-ராக்கள், இரு மொபைல்போன் டவர்களில் இருந்த மின்சாதன பொருட்கள் நாசமாகின. கடைகள், லேத் பட்டறைகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள், இயந்தி-ரங்கள் பழுதாகின. மேலும், வீடுகளில் இருந்த மின் மீட்டர்கள் எரிந்து கருகின. மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், அவர்கள் எந்த பதிலும் கூறவில்லை. கடைசியில் மின் மீட்டர்-களை மட்டும் மாற்றி கொடுப்பதாக தெரிவித்தனர். சேதமான மின்சாதன பொருட்களுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது எனக்கூறி விட்டதாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.
சூளகிரி தாலுகாவில், மின்
வாரியம் அலட்சியமாக உள்ளதாக, மக்கள் குற்றம்சாட்டியுள்-ளனர். கடந்த இரு நாட்களுக்கு முன், யானைகள் ஊருக்குள் புகுந்து விட்டதாக கூறி இரவு, 8:30 மணிக்கு மின்தடை செய்யப்-பட்டது. அதன் பின் மறுநாள் காலை, 6:00 மணிக்கு தான் மீண்டும் மின் சப்ளை வழங்கப்பட்டது. அதேபோல், சூளகிரியில் அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். கோடை காலம் என்பதால், மின்சாரமின்றி இருக்க முடியாமல் தவிப்பதாக, மக்கள் கூறுகின்-றனர்.

