ADDED : அக் 12, 2026 02:24 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில், நீதிமன்ற உத்தரவின்படி தீப துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் ஹிந்து முன்னணி சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில நிர்வாக குழு உறுப்பினர் உமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட செயலாளர் ஹரீஷ், ஓசூர் மாநகர தலைவர் சசிகுமார், கெலமங்கலம் நகர தலைவர் கர்ணா முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், திருப்பரங்குன்றம் தீப துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பா.ஜ., ஒன்றிய தலைவர் ராஜேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
