ADDED : அக் 12, 2026 02:17 AM
தேன்கனிக்கோட்டை: உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சோட்டு, 44. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கிரியானப்பள்ளி கிராமத்தில் தங்கி, அங்குள்ள தனியார் பண்ணை வீட்டில் வேலை செய்து வந்தார்.
இவரும், உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாபு, 28, என்பவரும் உறவினர்கள். இவர், சந்தனப்பள்ளியில் உள்ள தனியார் பண்ணை வீட்டில் பணியாற்றி வருகிறார். கடந்த, 7ம் தேதி மாலை, 5:30 மணிக்கு, சோட்டு தன் பைக்கில் சந்தனப்பள்ளியில் உள்ள பாபு வேலை செய்யும் பண்ணை வீட்டை கடந்து சென்றார். அப்போது, சாலையில் பாபு நின்று கொண்டிருந்தார்.இது குறித்து சோட்டு கேள்வி எழுப்பியதால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பாபு, தகாத வார்த்தையால் சோட்டுவை திட்டி, மரக்கட்டையால் தாக்கி மிரட்டல் விடுத்தார். இதில் காயமடைந்த சோட்டு, தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார், பாபுவை கைது செய்து ஜாமினில் விடுவித்தனர்.
