ADDED : நவ 14, 2025 01:24 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரியில் ஊர்க்காவல் படை தின விழா நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட ஊர்க்காவல் படை ஏரியா கமாண்டர் கவுஷிக் தேவ் தலைமை வகித்தார். டிவிசனல் கமாண்டர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். விழாவில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை குத்துவிளக்கேற்றினார். தஞ்சையில் நடந்த மாநில அளவிலான விளையாட்டு மற்றும் திறன் போட்டியில் கவாத்து பயிற்சியில் மாநில அளவில் முதலிடம் பிடித்த, கிருஷ்ணகிரி ஊர்க்காவல் படைக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை வழங்கினார்.
அதேபோல தனி நபர் போட்டியில், 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதலில் முதலிடமும், 16 கி.மீ., நகர்வல ஓட்ட போட்டியில், 2-ம் இடமும் பிடித்த கிருஷ்ணகிரி ஊர்க்காவல் படை அணி வீரர்களை, எஸ்.பி., தங்கதுரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார். மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,க்கள் சங்கர், நமச்சிவாயம், கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி மற்றும் போலீசார், ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டனர்.

