/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
/
தேன்கனிக்கோட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
ADDED : நவ 14, 2025 01:25 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டையில் நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. இதனால், சாலைகள் அகலப்படுத்த முடியாமலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உத்தரவுப்படி, அப்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு கடந்த, 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கவிதா தலைமையில் நடந்தது. உதவிபொறியாளர் நவீன்குமார் சாலை ஆய்வாளர் முருகேசன் மற்றும் சாலை பணியாளர்கள், பொக்லைன் உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.
தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி., ஆனந்தராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர்.

