sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரோஜா செடிகளில் டவுனியா நோய் பாதிப்பு கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

/

ரோஜா செடிகளில் டவுனியா நோய் பாதிப்பு கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

ரோஜா செடிகளில் டவுனியா நோய் பாதிப்பு கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை

ரோஜா செடிகளில் டவுனியா நோய் பாதிப்பு கட்டுப்படுத்த தோட்டக்கலைத்துறை அறிவுரை


ADDED : டிச 08, 2024 01:00 AM

Google News

ADDED : டிச 08, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர், டிச. 8-

ஓசூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெனிபர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஓசூர் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கொய்மலரான ரோஜா மற்றும் உதிரி ரோஜாக்களில் தற்போது நிலவும் குளிர் சீதோஷ்ணத்தால், அதிகளவில் கீழ் சாம்பல் நோய் (டவுனியா) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்புக்கு ஆளான செடிகளின் இலைகளில் முதலில் பழுப்பு நிற புள்ளிகள் தென்பட்டு, பின்பு வெளிர் மஞ்சள் நிறமாக மாறும். இலைகள் பெரும்பாலும் இலை சுருளுடன், அதன் அடிப்பகுதியில் வெள்ளை நிற காளான் போன்ற பூஞ்சைகளின் வளர்ச்சி, இலைகளில் கரும்புள்ளிகள் அல்லது பட்டைகள் காணப்படும். இலையுதிர்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும். செடிகளை சுற்றி காற்றோட்டத்தை மேம்படுத்த, அருகிலுள்ள இலைகளை வெட்டி போதுமான இடைவெளி அளிக்க வேண்டும்.

செடிகளின் அடிப்பகுதியில் நீர் பாய்ச்சும் முறையை பின்பற்ற வேண்டும். தலா ஒரு லிட்டர் நீருக்கு டைமெத்தோமார்ப் என்ற பூஞ்சை கொல்லியை, 1 முதல், 2 கிராம் அளவிற்கும், குளோராதளோனில் பூஞ்சை கொல்லியை, 2 முதல், 3 கிராம் கலந்து தெளிக்கலாம். அல்லது, மாங்கோசெப் கீழ் சாம்பல் நோயை கட்டுப்படுத்த, ஒரு லிட்டர் நீரில், 2 - 3 கிராம் கரைத்து தெளிக்கலாம். காப்பர் ஆக்சிகுளோரைடு பூஞ்சை கொல்லியை, 2 - 3 கிராம் அளவில் நீரில் கரைத்து தெளிக்கலாம். பெனமிடோன் பூஞ்சை கொல்லியை, 0.1 - 0.2 மில்லி லிட்டரை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம். வானிலை நிலைமையை பொருத்து, 7 முதல், 10 நாட்கள் இடைவெளியில் பூஞ்சை கொல்லிகளை பயன்படுத்த வேண்டும்.

வெவ்வேறு செயல்பாடு முறைகளுடன் கூடிய பூஞ்சை கொல்லி ரசாயனங்களை, சுழற்சி முறையில் பயன்படுத்தலாம். பூஞ்சை காளான்களை நிர்வகிக்க, நன்மை பயக்கும் பூஞ்சை அல்லது பாக்டீரியா போன்ற உயிரியல் கட்டுப்பாடுகளை பயன்படுத்தலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us