/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அழகன் முருகன் கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

ADDED : நவ 04, 2025 02:01 AM
ஓசூர்,  ஓசூர் அழகன் முருகன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே, 100 அடி உயர மலை உச்சியில், அழகன் முருகன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா துவங்கி நடந்து வந்தது. நேற்று காலை வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, காலை, 9:30 மணிக்கு மேல், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள செல்வ கணபதி, இடும்பன் சன்னதிகளிலும் சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தனித்தனியாக கும்பாபிஷேகம் நடந்தன.
ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், முன்னாள் காங்., - எம்.எல்.ஏ., மனோகரன், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி உட்பட, பல ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகம் நடந்தபோது, கோவில் கோபுரத்தை சுற்றி கருடன் வட்டமிட்டதால், பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தையொட்டி, 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கிறது.