/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரகசிய அறை அமைத்து லாரியில் குட்கா கடத்தல்
/
ரகசிய அறை அமைத்து லாரியில் குட்கா கடத்தல்
ADDED : நவ 04, 2025 02:00 AM
ஓசூர்,  ஓசூர், பூனப்பள்ளி சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் செல்வராசன் மற்றும் போலீசார், நேற்று வாகன சோதனை செய்தனர். கர்நாடகா மாநிலத்திலிருந்து வந்த ஈச்சர் லாரியை சோதனை செய்ய நிறுத்தியபோது, டிரைவர் லாரியை நிறுத்தி விட்டு தப்பினார். போலீசார், லாரியின் கன்டெய்னர் பகுதியை திறந்து பார்த்தபோது, வெளியில் உள்ளதை விட, உள் பகுதியில் அளவு குறைவாக இருப்பது தெரிந்தது.
தீவிர சோதனையில், லாரிக்குள் சிறிய அளவில் ரகசிய அறை போல் அமைத்திருப்பது தெரிந்தது. அதை திறந்து பார்த்தபோது, மூட்டை, மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தன. ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ஒரு டன் புகையிலை பொருட்கள், 2,500 ரூபாய் மதிப்புள்ள, 48 கர்நாடகா மாநில மதுபான பாக்கெட் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.

