/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்
/
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்
கல்லுாரி மாணவர்களுக்கு ரூ.33.32 லட்சம் கல்விக்கடன்
ADDED : நவ 04, 2025 02:00 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 527 மனுக்களை பொதுமக்களிடம் பெற்றார்.
முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கம் சார்பில் பஞ்சாப், ஹரியானா, உ.பி., மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 1.25 லட்சம் ரூபாயை, பிரதமர் நிவாரண நிதிக்கான காசோலையை கலெக்டர் தினேஷ் குமாரிடம் வழங்கினர்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பேருக்கு, மொத்தம், 48,500 ரூபாய் மதிப்பில் காதொலி கருவிகள், சக்கர நாற்காலிகள் மற்றும், கல்விக்கடன் கோரிய, 7 மாணவ, மாணவியருக்கு, 33.32 லட்சம் ரூபாய் கல்வி கடன்கனுக்கான காசோலையை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கினார்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

