/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
200 தொழிற்சாலைகளில் 13 ஆண்டாக ரூ.50 கோடி வரி வசூலிக்காத ஓசூர் மாநகராட்சி
/
200 தொழிற்சாலைகளில் 13 ஆண்டாக ரூ.50 கோடி வரி வசூலிக்காத ஓசூர் மாநகராட்சி
200 தொழிற்சாலைகளில் 13 ஆண்டாக ரூ.50 கோடி வரி வசூலிக்காத ஓசூர் மாநகராட்சி
200 தொழிற்சாலைகளில் 13 ஆண்டாக ரூ.50 கோடி வரி வசூலிக்காத ஓசூர் மாநகராட்சி
ADDED : ஜன 01, 2025 10:47 PM
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சியில் மொத்தம், 97,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, 79 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் கிடைக்கிறது. மாநகராட்சியில் தற்போது, 15,000 கட்டடங்களுக்கு சொத்து வரி விதிக்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில், ஓசூரில் தொழிற்சாலைகள் அதிகமுள்ள பகுதியை குடியிருப்பு பகுதியாகவே தொடர்ந்ததால், தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகளுக்கு விதிக்கப்படும் குறைந்தளவு சொத்து வரியை செலுத்தி வந்துள்ளன.
அதனால், மாநகராட்சிக்கு, 50 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வரி இழப்பு ஏற்பட்டிருந்தது சமீபத்தில் கண்டறியப்பட்டு, தொழிற்சாலை பகுதிகளுக்கு சரியான விகிதாச்சார அடிப்படையில் சொத்து வரி விதிக்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், தற்போது மேலும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் மாநகராட்சி பகுதியில் அரங்கேறியுள்ளது.
ஓசூர் நகராட்சியாக இருந்தபோது, கடந்த 2011ல், ஜூஜூவாடி பஞ்., இணைக்கப்பட்டது. இந்த பஞ்., உட்பட்ட அனுமேப்பள்ளி அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள சிறு, குறுந்தொழிற்சாலைகள், பஞ்.,க்கு சொத்து வரி செலுத்தி வந்தன.
ஆனால், ஜூஜூவாடி பஞ்., நகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின், அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள தொழிற்சாலைகளிடம் இருந்து நகராட்சி நிர்வாகம் சொத்து வரியை வசூல் செய்ய மறந்து விட்டது. அதன்பின் ஓசூர் மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
அப்படி இருந்தும் கடந்த, 13 ஆண்டுகளாக அனுமேப்பள்ளி அக்ரஹாரத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு சொத்து வரி விதிக்கப்படவில்லை.
இதனால் கடந்த, 13 ஆண்டுகளாக ஓசூர் மாநகராட்சிக்கு, 50 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இதை அறிந்த மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் நேரடியாக ஆய்வு செய்து, 200க்கும் மேற்பட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகளின் கட்டடங்களை கண்டறிந்து, சொத்து வரி விதிக்க நடவடிக்கை இப்போதுதான் எடுத்துள்ளார்.