/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வினாடி-வினா போட்டியில் முதலிடம்
/
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வினாடி-வினா போட்டியில் முதலிடம்
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வினாடி-வினா போட்டியில் முதலிடம்
ஓசூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வினாடி-வினா போட்டியில் முதலிடம்
ADDED : செப் 09, 2025 01:57 AM
ஓசூர், ஓசூர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, கதை கூறுதல், வினாடி - வினா என பல பிரிவுகளாக, அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, ஒன்றிய அளவில் இலக்கிய மன்ற போட்டிகள் நடந்தன.
இதில், ஓசூர் பேடரப்பள்ளி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியின், 7ம் வகுப்பு மாணவியர் மேத்தா மற்றும் மதுஸ்ரீ ஆகியோர், வினாடி - வினா போட்டியில், ஒன்றிய அளவில் முதலிடம் பெற்றனர். அவர்களுக்கு, பள்ளி தலைமையாசிரியர் பொன்நாகேஷ் நேற்று பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். மேலும், இம்மாதம் நடக்க உள்ள மாவட்ட அளவிலான போட்டியில் முதலிடம் பெற வாழ்த்து தெரிவித்தார்.