/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கி தொழிற்சாலை, 5 கடைகளுக்கு 'சீல்'
/
ஓசூர் மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கி தொழிற்சாலை, 5 கடைகளுக்கு 'சீல்'
ஓசூர் மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கி தொழிற்சாலை, 5 கடைகளுக்கு 'சீல்'
ஓசூர் மாநகராட்சிக்கு சொத்து வரி பாக்கி தொழிற்சாலை, 5 கடைகளுக்கு 'சீல்'
ADDED : டிச 10, 2024 07:58 AM
ஓசூர்: ஓசூரில், மாநகராட்சிக்கு சொத்து வரி செலுத்தாத, 5 கடைகள் மற்றும் ஒரு தொழிற்சாலைக்கு மாநகராட்சி ஊழியர்கள் நேற்று, 'சீல்' வைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சிக்கு ஆண்டு-தோறும், 80 கோடி ரூபாய் அளவிற்கு சொத்து வரி மூலம் வருவாய் கிடைக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி எல்-லைக்குள் இயங்கும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள், தனியார் பள்ளிகள் அதிகபட்சமாக, 3 ஆண்டுகளுக்கு மேலாக சொத்து வரி
செலுத்தாமல் உள்ளன. ஆண்டுதோறும், 60 முதல், 70 சதவீதம் வரை மட்டுமே சொத்து வரி
வசூலாகிகிறது. 6 மாதத்திற்கு மேலாக சொத்து வரி பாக்கி வைத்துள்ள நிறுவ-னங்கள், கடைகள்,
தொழிற்சாலைகள், தனியார் பள்ளிகளுக்கு, 'சீல்' வைக்க மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த்
உத்தரவிட்டார்.அதன்படி அவரது தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று பாகலுார் சாலை, பாரதி நகர், திருமலை
நகர் உட்பட பல்-வேறு இடங்களில் ஆய்வு செய்து, சொத்து வரி செலுத்தாத, 5 கடைகள் மற்றும் ஒரு
தொழிற்சாலைக்கு, 'சீல்' வைத்தனர். மூன்-றாண்டுகளாக சொத்து வரி செலுத்தாத தனியார் பள்ளிக்கு,
'சீல்' வைக்க சென்றபோது, 17 லட்சம் ரூபாய் சொத்து வரி பாக்கியை பள்ளி நிர்வாகம் உடனடியாக
செலுத்தியது.மாநகராட்சி பகுதியில் சொத்து வரி பாக்கி வைத்திருப்போர் உடனடியாக நிலுவை தொகையை செலுத்தா
விட்டால், 'சீல்' வைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.