/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வணிகவரித்துறை இறகு பந்து போட்டி ஓசூர் கோட்டம் ஒட்டுமொத்த 'சாம்பியன்'

ADDED : ஆக 24, 2025 12:50 AM
ஓசூர், ஓசூரில் நடந்த வணிக வரித்துறையினருக்கான மாநில இறகு பந்து போட்டியில், ஓசூர் கோட்டம் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முனீஸ்வர் நகரில், வணிகவரித்துறையின் விளையாட்டு மற்றும் கலாசார மையம் சார்பில், ஊழியர்களின் திறமையை வெளி கொண்டு வரவும், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை வளர்க்கும் வகையிலும், மாநில அளவிலான இறகு பந்து போட்டிகள் நடந்தன. இதில், பல கோட்டங்களை சேர்ந்த வணிகவரித்துறையில் பணியாற்றும், 150க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர். ஒற்றையர், இரட்டையர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.
வணிகவரித்துறை கலாசார மைய தலைவர் தேவேந்திர
பூபதி, செயலாளர் ரவி மற்றும் ஓசூர் கோட்ட இணை ஆணையர் ஜானகி வாசுதேவன், ஓசூர் நுண்ணறிவு பிரிவு இணை ஆணையர் அன்புகனி ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினர். இப்போட்டியின், இறுதியில் ஒட்டு மொத்த சாம்பியன் கோப்பையை, ஓசூர் கோட்டம் வென்றது. 2வது இடத்தை கோவை பெற்றது.