/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சரக வாலிபால் போட்டி ஓசூர் அரசு பள்ளி வெற்றி
/
சரக வாலிபால் போட்டி ஓசூர் அரசு பள்ளி வெற்றி
ADDED : ஜூலை 13, 2025 02:03 AM
ஓசூர், ஓசூரில் நடந்த சரக அளவிலான வாலிபால் போட்டியில், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்
நிலைப்பள்ளி அணிகள் வெற்றி பெற்றன.
ஓசூர், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ஓசூர் சரக விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில், 19 வயதிற்கு உட்பட்ட ஆண்கள் வாலிபால் இறுதி போட்டியில், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்
நிலைப்பள்ளி அணியும், செவன்த்டே பள்ளி அணியும் மோதின. இதில், 25 - 2, 25 - 23 என்ற நேர் செட் கணக்கில், ஓசூர் ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று, முதலிடத்தை தட்டி சென்றது. அதேபோல், 14 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில், ஆர்.வி., அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியும், மூக்கண்டப்பள்ளி அரசு மேல்
நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில், 25 - 12, 25 - 18 என்ற நேர் செட் கணக்கில், ஆர்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
இரு பிரிவுகளிலும் வெற்றி பெற்ற ஆர்.வி., அரசு மேல்நிலைப்பள்ளி அணி, கிருஷ்ணகிரி வருவாய் கல்வி மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது. வெற்றி பெற்ற அணி வீரர்களை, தலைமையாசிரியர் (பொறுப்பு) முருகேசன், உடற்கல்வி ஆய்வாளர் கனிமொழி, உடற்கல்வி ஆசிரியர்கள் பாஸ்கர், கோவிந்தசாமி மற்றும் வாலிபால் பயிற்சியாளர் தாயுமானவன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.