/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., - அதியமான் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
/
ஓசூர் எம்.ஜி.ஆர்., - அதியமான் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ஓசூர் எம்.ஜி.ஆர்., - அதியமான் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ஓசூர் எம்.ஜி.ஆர்., - அதியமான் கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ADDED : நவ 22, 2024 01:37 AM
ஓசூர் எம்.ஜி.ஆர்., - அதியமான்
கல்லுாரிகளின் பட்டமளிப்பு விழா
ஓசூர், நவ. 22-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் எம்.ஜி.ஆர்., கல்லுாரியில், 33வது பட்டமளிப்பு விழா இன்று (நவ.22) காலை, 9:30 மணிக்கு, கல்லுாரி உள்விளையாட்டரங்கில், கல்லுாரி முதல்வர் முத்துமணி தலைமையில் நடக்கிறது. இதில், சென்னை பல்கலை பதிவாளர் பேராசிரியர் சன்னியாசி ஏழுமலை பங்கேற்று, 2022 - 23ம் கல்வியாண்டில் பயின்ற, 800க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்க உள்ளார்.
அதேபோல், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரியின், 33வது பட்டமளிப்பு விழா வரும், 24 காலை, 9:30 மணிக்கு, கல்லுாரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடக்கிறது.
இதில், ஏ.ஐ.சி.டி.இ., நிறுவன தலைவர் பேராசிரியர் முனைவர் டி.ஜி.சீதாராம் மற்றும் ஓலா நிறுவன மூத்த இயக்குனர் சிவக்குமார் ஆகியோர், 2022 - 23ம் கல்வியாண்டில் கல்லுாரியில் படித்த, 1,000க்கும் மேற்பட்ட இளங்கலை, முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவ, மாணவியருக்கு, பட்டங்களை வழங்குகின்றனர். இந்த இரு பட்டமளிப்பு விழாவிலும், அதியமான் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, கல்வி அறக்கட்டளை உறுப்பினர் லாசியா தம்பிதுரை மற்றும் மாணவ, மாணவியரின் பெற்றோர், கல்லுாரி பேராசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.