/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'எலி பேஸ்ட்' சாப்பிட்டவரை காப்பாற்றிய ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவமனை

ADDED : டிச 24, 2024 01:44 AM
ஓசூர், டிச. 24-
கிருஷ்ணகிரி பகுதி கூலித்தொழிலாளியான, 44 வயதான ஆண் ஒருவர், கடந்த, 7ல் நிலப்பிரச்னையில், 'எலி பேஸ்ட்' சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
அவரை மீட்ட உறவினர்கள், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையிலும் பின் மேல்சிகிச்சைக்கு, கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையிலும் அனுமதித்தனர். அவரை காப்பாற்றுவது கடினம் என தெரிவித்தனர்.
இதனால், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கடந்த, 8ல் அவரை அனுமதித்தனர். அவரை பரிசோதித்த போது, 'எலி பேஸ்ட்' கல்லீரலை முழுமையாக பாதித்த நிலையில், மஞ்சள் காமாலை பாதிப்பும் இருந்தது.
இதையடுத்து, மருத்துவர்களான மானிகா, ஹர்ஷா, அம்ரித் அடங்கிய குழுவினர், 24 மணி நேரமும் தொழிலாளியின் உடல்நிலையை கண்காணித்து, அவருக்கு உயர்தர சிகிச்சைகள் மற்றும் 3 முறை 'பிளாஸ்மா பெரிசிஸ்' சிகிச்சை அளித்து அவரது உயிரை காப்பாற்றினர்.
கல்லீரலை மாற்ற வேண்டிய நிலையில், அதை மாற்றாமல், உயரிய சிகிச்சையளித்து தொழிலாளி உயிரை காப்பாற்றி சாதனை படைத்தனர்.
அந்த டாக்டர்கள் குழுவினரை, கல்லுாரி தலைவர் தம்பிதுரை
எம்.பி., மற்றும் செயலாளர் டாக்டர் லாசியா தம்பிதுரை ஆகியோர் பாராட்டினர்.