/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி வேளாங்கண்ணி பள்ளி குழும மருத்துவ முகாம்

ADDED : நவ 11, 2024 07:21 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, வேளாங்கண்ணி பப்ளிக் பள்ளி வளாகத்தில், ஓசூர் செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி, வேளாங்கண்ணி பள்ளிக்குழுமம் இணைந்து, இலவச மருத்துவ முகாமை நேற்று நடத்தியது. வேளாங்கண்ணி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். மருத்துவக் கல்லுாரி முதல்வர் ராஜா முத்தையா, மருத்துவ அலுவலர் டாக்டர் பார்வதி, சி.ஓ.ஓ., அன்பன் சேவியர், வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., முதல்வர் விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி அறங்காவலர் டாக்டர் லாசியா தம்பிதுரை, குத்துவிளக்கேற்றி முகாமை துவக்கி வைத்து பேசுகையில், ''ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டமாக இப்பகுதி இருந்தபோது, இப்பகுதி மக்கள் கல்வியில் வளர்ச்சிடைய, என் தந்தை தம்பிதுரை எம்.பி., பள்ளிகள், கலைக்கல்லுாரி, இன்ஜினியரிங் கல்லுாரிகளை துவக்கினார். அதன் மூலம் தற்போது இப்பகுதியை சேர்ந்தவர்கள் கல்வி பயின்று, பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். உடல் நலம் முக்கியத்துவம் அறிந்த அவர் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவக் கல்லுாரியை ஓசூரில் துவங்கினார். சமூக சேவை நோக்கத்தில் நடந்து வரும் இந்த மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், குறைந்த கட்டணத்தில் பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது,'' என்றார்.