ADDED : ஜூன் 24, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூரின், 78வது சப்-கலெக்டராக கடந்த, 2023 டிச., 17 ல், ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பிரியங்கா பொறுப்பேற்று கொண்டார். ஓசூரில் ஒன்றரை ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வந்த இவரை, தமிழக அரசு நேற்று இடமாற்றம் செய்து, கடலுார் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வளர்ச்சி) கூடுதல் கலெக்டராக நியமித்துள்ளது.
ஓசூர் சப்-கலெக்டர் பணியிடத்திற்கு புதிய அதிகாரிகள் யாரும் நியமிக்கப்படவில்லை. பிரியங்கா பணிமாறுதல் உத்தரவு பெற்று செல்லும் வரை, ஓசூர் சப்-கலெக்டர் பணியை அவர் தொடர்ந்து கவனிப்பார். அதன் பின், தமிழக அரசு சப்-கலெக்டர் பதவிக்கு அதிகாரியை நியமிக்கும் வரை, பொறுப்பு அதிகாரி நியமிக்கப்படுவார் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.