/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 3 நாட்களாக வெளியேறி வரும் உபரிநீர்
/
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 3 நாட்களாக வெளியேறி வரும் உபரிநீர்
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 3 நாட்களாக வெளியேறி வரும் உபரிநீர்
ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் 3 நாட்களாக வெளியேறி வரும் உபரிநீர்
ADDED : அக் 08, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி, கரீம்சாயபு ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதால், மழைநீர் தேங்காமல், வீணாக வெளியேறி வருகிறது.
கிருஷ்ணகிரி - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில், கட்டிகானப்பள்ளி பஞ்சாயத்தில் கரீம்சாயபு ஏரி, 105 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 1,400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. ஏரியில் மீன்பிடி குத்தகை விடுவதன் மூலம், அரசுக்கு வருவாயும் கிடைக்கிறது. கடந்த, 3 நாட்களுக்கு முன், கிருஷ்ணகிரியில், 12 செ.மீ., மழை பெய்தது. இதனால் சின்னஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி கரீம்சாயபு ஏரிக்கு சென்றது. கரீம் சாயபு ஏரி, ஏற்கனவே நிரம்பி உள்ளதால் ஏரிக்கு வந்த தண்ணீர் முழுவதும் காட்டுஆஞ்சநேயர் கோவில் சாலையில் ஆறாக ஓடியது.
இந்த ஏரியை துார்வாரி பல ஆண்டுகள் ஆனதாலும், ஏரியை சுற்றிலும், 100க்கும் மேற்பட்டவர்கள் வீடுகளை கட்டி ஆக்கிரமித்துள்ளதாலும், கடந்த, 3 நாட்களாக ஏரிக்கு வந்த தண்ணீர் முழுவதும் நேற்று வரை, சாலையில் ஆறாக ஓடியது.
இந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்ட கால்வாயும் ஆக்கிரமிப்பில் உள்ளதால், புதிதாக அமைக்கப்பட்ட தார்ச்சாலையில் தொடர்ந்து தண்ணீர் ஓடி, தார்ச்சாலை அரித்து சேதமடைந்துள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மேடு, பள்ளம் தெரியாமல் கீழே விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே ஏரியை துார்வாரி, ஏரியை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்றி, உபரிநீர் வெளியேறும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும், இது வரை நடவடிக்கை இல்லை.