/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசின் திட்டங்களை அலுவலர்கள் முறையாக செயல்படுத்த அறிவுறுத்தல்
/
அரசின் திட்டங்களை அலுவலர்கள் முறையாக செயல்படுத்த அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களை அலுவலர்கள் முறையாக செயல்படுத்த அறிவுறுத்தல்
அரசின் திட்டங்களை அலுவலர்கள் முறையாக செயல்படுத்த அறிவுறுத்தல்
ADDED : அக் 08, 2025 01:28 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி நகராட்சி, 7, 15 வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு டி.பி., ரோடு தனியார் மஹாலிலும், பெத்தனப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட மக்களுக்கு காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலிலும், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
காட்டிநாயனப்பள்ளி முருகர் கோவிலில் நடந்த முகாமை பார்வையிட்ட மதியழகன் எம்.எல்.ஏ., அங்கு மனு அளிக்க வருவோர், எந்த துறையிடம் மனு அளிக்க வேண்டும் என தெரியாமல் நின்றதை பார்த்தார். அங்கிருந்த அலுவலர்களை அழைத்த அவர், முகாமிற்கு மிக குறைந்த அளவிலேயே மக்கள் வந்துள்ளனர்.
முகாம் நடப்பது குறித்து மக்களுக்கு முறையாக நீங்கள் தெரிவிப்பதில்லை. மனுக்களை அளிக்க வருவோரை, பொறுப்பு அதிகாரியாக இருந்து அழைத்து செல்ல வேண்டாமா. அலுவலர்கள் மக்களை அழைத்து மனுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசின் நல்ல திட்டங்களை, அலுவலர்கள் முறையாக செயல்படுத்துங்கள் எனக்கூறி, அப்பகுதி தி.மு.க., நிர்வாகிகளையும் கடிந்து கொண்டார்.
முகாமில், கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.