ADDED : ஆக 19, 2025 03:24 AM
ஊத்தங்கரை, ஆகிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மனிதநேய தினத்தை முன்னிட்டு நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமி தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர்
சக்திவேல் முன்னிலை வகித்தார்.
ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையிலுள்ள பெண்களுக்கு மளிகை பொருட்கள், இனிப்புடன் கூடிய உணவு, நிதி உதவி ஆகியவற்றை ஜாகிதா முபாரக் அலி, உசேன், சென்னகிருஷ்ணன், பாஸ்கரன், ஆஞ்சி ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர். மனிதநேயத்தை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் திம்மையன் மற்றும் திருப்பதி ஆகியோர் ராகத்துடன் பாடல் பாடி அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்தனர். முன்னதாக ஜே.ஆர்.சி., மாணவர் சஞ்சய் வரவேற்றார். ஜே.ஆர்.சி., மாணவர் சபரிவாசன் நன்றி கூறினார்.

