/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பள்ளியில் அத்துமீறிய கணவனால் மனைவி பதவியை பறிக்க உத்தரவு
/
பள்ளியில் அத்துமீறிய கணவனால் மனைவி பதவியை பறிக்க உத்தரவு
பள்ளியில் அத்துமீறிய கணவனால் மனைவி பதவியை பறிக்க உத்தரவு
பள்ளியில் அத்துமீறிய கணவனால் மனைவி பதவியை பறிக்க உத்தரவு
ADDED : நவ 01, 2025 01:40 AM
ஓசூர்: ஓசூரில், அரசு பள்ளி வகுப்பறைக்குள், பெண் ஒருவருடன் சென்ற தன் கணவனின் அத்துமீறிய செயலால், அவரது மனைவியான பள்ளி மேலாண்மை குழு தலைவியை பதவி நீக்கம் செய்ய, தலைமையாசிரியருக்கு முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் முல்லை நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில், 2,000 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக காந்தி உள்ளார்.
இப்பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு தலைவி சானசந்திரத்தை சேர்ந்த உமா. இவரது கணவர் உமேஷ், 43. கை உறை தயாரிக்கும் நிறுவனம் நடத்துகிறார். பள்ளி நுழைவாயில் கேட் மற்றும் சில வகுப்பறை சாவிகள் உமேஷ் வசம் இருந்துள்ளன.
அக்., 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பெண் ஒருவரை உமேஷ் பள்ளிக்கு அழைத்து வந்து, வகுப்பறை ஒன்றுக்குள் சென்றுள்ளார். இதை பள்ளி வளாகத்தில் விளையாடிய மாணவர்கள் வீடியோ எடுத்தனர்.
பள்ளி வளாகத்தில் தனிமையில் இருப்பதேன் என, அவரிடம் மாணவர்கள் கேள்வி எழுப்ப, 'என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது' என, உமேஷ் பதிலளித்துள்ளார்.
அந்த வீடியோ காட்சிகள் பரவிய நிலையில், மாவட்ட பொறுப்பு முதன்மை கல்வி அலுவலர் முனிராஜ் நேற்று காலை பள்ளி தலைமையாசிரியர், மேலாண்மை குழு தலைவி உமா, அவரது கணவர் உமேஷ் மற்றும் ஆசிரியர்களிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
உமேஷ் மீது, ஓசூர் டவுன் ஸ்டேஷனில் புகார் செய்திருப்பதாக தலைமையாசிரியர் தெரிவித்தார். நடந்த சம்பவத்தை ஏன் தன்னிடம் கூறவில்லை என, முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியரை கடிந்து கொண்டார்.
தீர்மானம் நிறைவேற்றி, உமாவை பதவியில் இருந்து நீக்க, முதன்மை கல்வி அலுவலர், தலைமையாசிரியருக்கு உத்தரவிட்டார். மேலும், தனி நபரிடம் பள்ளி சாவியை கொடுக்கக் கூடாது என்றும் எச்சரித்தார்.
தலைமையாசிரியர் காந்தி, மாணவ - மாணவியரிடம், கூடுதல் கட்டணம் வசூல் செய்ததாக வெளியான வீடியோ குறித்தும், முதன்மை கல்வி அலுவலர் வி சாரித்தார்.

