/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் 100 அடி உயர மலையில் அமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம்;
/
ஓசூரில் 100 அடி உயர மலையில் அமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம்;
ஓசூரில் 100 அடி உயர மலையில் அமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம்;
ஓசூரில் 100 அடி உயர மலையில் அமைக்கப்பட்ட வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் திருக்கோவில் நாளை கும்பாபிஷேகம்;
ADDED : நவ 02, 2025 12:52 AM
தமிழக எல்லையான, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழில் நகராக இருப்பதால், பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்த மக்கள் குடியேறி வசிக்கின்றனர். அவர்களிடம் மொழி, இனம், உணவுமுறை போன்றவற்றில் மாற்றம் இருந்தாலும், கடவுள் வழிபாடு என்பது அனைவருக்கும் பொதுவானதாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் கோவிலுக்கு செல்லும்
பக்தர்கள் அதிகமாக உள்ளனர்.
ஓசூரில் பிரசித்தி பெற்ற மரகதாம்பிகை உடனுறை சந்திர
சூடேஸ்வரர் கோவிலுக்கு அடுத்தபடியாக, மக்கள் செல்ல விரும்பும் கோவில்களில் முதன்மையாக இருப்பது முருகன் கோவிலாகும்.
ஓசூரில், ஒரு சில முருகன் கோவில்கள் இருந்தாலும், சில கோவில்களில் தனி சன்னதியில் முருகன் அருள்பாலித்தாலும், மலை மீது முருகன் கோவில் இல்லையே என்ற வருத்தம் பக்தர்கள் மத்தியில் இருந்தது. அதை போக்கும் விதமாக, ஓசூர், பாகலுார் சாலையிலுள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே, 100 அடி உயர மலைக்குன்றின் உச்சியில், பிரமாண்டமான வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் கோவில் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
மஹா கும்பாபிஷேகம்
ஓசூர் பகுதி பக்தர்கள் பொருள் உதவியுடன் இந்த கோவில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நாளை (நவ.3) காலை, 9:30 முதல், 10:30 மணிக்குள், கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. கோவில் வளாகத்தில், செல்வகணபதி, இடும்பன் சன்னதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. நாளை (நவ.3) சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. கும்பாபிஷேக விழாவில், 30,000 பக்தர்களுக்கு மேல் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
கோவில் வடிவமைப்பு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் அடுத்த படமுடிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் ஆச்சாரி, முத்துக்குமார் ஆச்சாரி ஆகியோர் மூலம், ஆகம சிற்ப சாத்திர முறைப்படி, கோவில் கோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம் நரசிம்ம ஸ்தபதி மூலமாக, வள்ளி, தெய்வானை சமேத அழகன் முருகன் சுவாமி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
கனவு நனவானது
திருப்பரங்குன்றம், திருத்தணி, சுவாமி மலை, பழனி, திருச்செந்துார், பழமுதிர்சோலை ஆகிய முருகனின் அறுபடை வீடுகளில் பெரும்பாலானவை, மலைகளின் மீது அமைந்துள்ளன. ஒவ்வொரு மலையும் அதன் தனித்துவ ஆன்மிகம் மற்றும் இயற்கை சிறப்புகளை கொண்டுள்ளது. அதேபோல், ஓசூர் மலை மீதுள்ள முருகன் கோவில் இருக்கும் என, விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

