/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாலியல் சீண்டல் நடந்தால் அனைவரும் போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
/
பாலியல் சீண்டல் நடந்தால் அனைவரும் போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
பாலியல் சீண்டல் நடந்தால் அனைவரும் போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
பாலியல் சீண்டல் நடந்தால் அனைவரும் போராட வேண்டும்: அமைச்சர் மகேஷ்
ADDED : செப் 06, 2025 09:08 PM
கிருஷ்ணகிரி:“பள்ளி மாணவ, மாணவியருக்கு நடக்கும் பாலியல் சீண்டல் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிராக, அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்,” என, அமைச்சர் மகேஷ் பேசினார்.
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி கலையரங்கில், தனியார் பள்ளிகள் இயக்ககம் சார்பில், தனியார் பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கருத்தரங்கை துவக்கி வைத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பேசியதாவது:
அரசு, தனியார் பள்ளிகள் கவனத்தோடு செயல்பட்டாலும், அவ்வப்போது பாலியல் புகார் குறித்து வெளிவரும் செய்திகள், வெட்கி தலை குனிய வைத்துள்ளன. நவீன காலத்தில் நாகரிகம், பண்பாடு வளர்ந்திருந்தாலும், அதே போர்வையில், சில மிருகங்களும் உலா வருகின்றன. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளிடம் ஆசிரியர்கள் உட்பட யார் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாலும், பள்ளிகள் தங்கள் பெயர் கெட்டு விடும் என அதை மறைக்காமல், உடனடியாக போலீசார், குழந்தைகள் நலத்துறையிடம் புகார் அளிக்க வேண்டும்.
பள்ளிகள் எவ்வளவு சாமர்த்தியமாக செயல்பட்டாலும், அதையும் மீறி, அவ்வப்போது மாணவ, மாணவியருக்கு பாலியல் சீண்டல் குற்றங்கள் நடக்கின்றன.
பாலியல் சீண்டல்களுக்கு எதிராக அனைத்து தரப்பினருடன் ஒன்றிணைந்து பள்ளி நிர்வாகங்கள் போராட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கருத்தரங்கில், உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ், மருத்துவக் கல்லுாரி முதல்வர் சத்யபாமா, பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் சுகன்யா மற்றும் தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலர் கோபாலப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.