sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை

/

இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை

இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை

இ-பர்மிட் இன்றி கனிமங்களை கொண்டு சென்றால் நடவடிக்கை


ADDED : பிப் 19, 2025 06:52 AM

Google News

ADDED : பிப் 19, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இ-பர்மிட் எனப்படும் மின்னணு நடைசீட்டுகள் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் ஏற்றி சென்றால், நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்வது தொடர்பாக மின்னணு நடைசீட்டு (இ-பர்மிட்) நடைமுறை கடந்த, 12 ல் சூளகிரி தாலுகாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, குவாரி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில், இ-பர்மிட் பெற்று, கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்கிறார்கள். அதைத்தொடர்ந்து ஓசூர் தாலுகாவில் கடந்த, 16 முதல், இ-பர்மிட் நடைமுறை படுத்தப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் மாவட்டத்தில் மற்ற அனைத்து தாலுகாவிலும் இதே, இ-பர்மிட் நடைமுறை படுத்தப்பட உள்ளது.மாவட்டத்திலுள்ள குவாரி உரிமையாளர்கள் இனி வரும் நாட்களில், கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்ல, ஆன்லைனில் விண்ணப்பம் செய்து பெறப்பட்ட, இ-பர்மிட் மட்டுமே பயன்படுத்தி, கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்ல வேண்டும். இ-பர்மிட் இல்லாமல் கனிமங்களை வாகனங்களில் கொண்டு செல்வது தெரிந்தால், நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது தொடர்பாக, 04343 - 1077 அல்லது 04343 - 234444 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us