/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி நகருக்குள் உருதில் பேசி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
/
கிருஷ்ணகிரி நகருக்குள் உருதில் பேசி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
கிருஷ்ணகிரி நகருக்குள் உருதில் பேசி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
கிருஷ்ணகிரி நகருக்குள் உருதில் பேசி அ.தி.மு.க., வேட்பாளர் ஓட்டு வேட்டை
ADDED : ஏப் 03, 2024 02:10 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி
நகராட்சியில் மொத்தம், 33 வார்டுகள் உள்ளன. இதில் பெரும்பாலான
பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர். நேற்று காலை கிருஷ்ணகிரி
நகராட்சியின், 1வது வார்டு கோட்டை பகுதியில், கிருஷ்ணகிரி லோக்சபா
தொகுதி, அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயபிரகாசுக்கு ஆதரவாக
அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் முனுசாமி எம்.எல்.ஏ., பிரசாரத்தை துவக்கி வைத்து பேசினார்.
கிருஷ்ணகிரி நகரில் கோட்டை,
பழையபேட்டை, புதுப்பேட்டை லண்டன் பேட்டை, பாரதியார் நகர் உள்ளிட்ட
பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம். அ.தி.மு.க., வேட்பாளர்
ஜெயபிரகாசுக்கு உருது உட்பட, 6 மொழிகள் தெரியும் என்பதால்,
இப்பகுதிகளில் அவர், உருதிலும், தமிழிலும் பேசினார். அங்குள்ள
தர்காவில் உள்ள அஜ்ரத்துகளையும் சந்தித்தும், பூந்தோட்டம்,
செட்டியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் ஓட்டு கேட்டார். தேர்தலில்
வெற்றி பெற்றால், 6 சட்டசபை தொகுதிகளிலும் எம்.பி., அலுவலகம்
திறக்கப்படும். கிருஷ்ணகிரியில் அமையவுள்ள எம்.பி., அலுவலகத்தில்
ஒவ்வொரு, 15 நாட்களுக்கு ஒரு முறை மக்களிடம் குறைகள் கேட்கப்படும்
என, வாக்குறுதி அளித்தார்.
கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட
செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., நகர செயலாளர் கேசவன், கிருஷ்ணகிரி,
தே.மு.தி.க., கிழக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து
கொண்டனர்.

