/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'ஓசூருக்கு தற்போதைய சூழலில் தினமும் 10 விமானங்கள் வந்து சென்றால் போதும்'
/
'ஓசூருக்கு தற்போதைய சூழலில் தினமும் 10 விமானங்கள் வந்து சென்றால் போதும்'
'ஓசூருக்கு தற்போதைய சூழலில் தினமும் 10 விமானங்கள் வந்து சென்றால் போதும்'
'ஓசூருக்கு தற்போதைய சூழலில் தினமும் 10 விமானங்கள் வந்து சென்றால் போதும்'
ADDED : டிச 24, 2025 07:52 AM

ஓசூர்: ''ஓசூருக்கு தற்போதைய சூழலில் தினமும், 10 விமானங்கள் வந்து சென்றாலே போதும்,'' என, பா.ஜ., மாநில செய்தி தொடர்-பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான நரசிம்மன் கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், நேற்று மாலை நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ஓசூர் அருகே, கடந்த இரு நாட்களுக்கு முன், விவசாயிகள் போராட்டத்தில், விவசாய நிலத்தை கையகப்-படுத்தி, விமான நிலையம் கொண்டு வர, மாநில அரசு முயற்சிப்-பதாக கூறி, கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், விமான நிலையம் நாங்கள் கேட்கவே இல்லை.
அதற்கான எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை. நாங்கள் எவ்வித நில அளவீடுகளும் மேற்கொள்ளவில்லை. அனைத்துமே மத்திய அரசு செய்கிறது என கூறியிருக்கிறார். ஒப்புதல் வழங்குவது மட்டுமே, மத்திய அரசின் வேலை. விமான நிலையம் எங்கு வேண்டும் என தேர்வு செய்வது, விமான நிலையம் வேண்டும் என கேட்பது, மாநில அரசின் வேலை. எம்.எல்.ஏ., கூறுவது உண்மை என்றால், அடுத்த கூட்டத்தில் நாங்கள் விமான நிலையம் அறி-விப்பை திரும்ப பெற்று கொள்வதாக சொல்லட்டும். நாங்கள் அனைவரும் அரசியலை விட்டு விலகி விடுகிறோம்.
ஏற்கனவே இருக்கும் விமான நிலையத்தை புதுப்பித்து, கர்நா-டக மாநில அரசு மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி, இங்குள்ளதை செயல்படுத்தி-னாலே போதும். தற்சமயம் உள்ள சூழலில் நாள்தோறும், 10 விமானங்கள் வந்து சென்றால் போதுமானது.
இவ்வாறு, அவர் கூறினார்.

