/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பா.ஜ-., மாநில தலைவர் பங்கேற்கும் கூட்டத்தில் திரளாக பங்கேற்க அழைப்பு

ADDED : டிச 24, 2025 07:56 AM

கிருஷ்ணகிரி: பா.ஜ., மாநில தலைவர் நாகேந்திரன் பங்கேற்கும் பொதுக்கூட்-டத்தில் திரளாக பங்கேற்குமாறு, கிருஷ்ணகிரி, பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் கவியரசு கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் இன்று மாலை, 6:00 மணிக்கு, பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.,வின், 'தமி-ழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' சுற்றுப்பயண யாத்திரை பொதுக்கூட்டம் நடக்கிறது. இதே போல், நாளை (டிச.25) பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வரட்டனப்பள்ளி மேல்தெ-ருவில் காலை, 10:00 மணிக்கு, பா.ஜ., சார்பில், சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்கிறது. இதில், பா.ஜ., மாநிலத்தலைவர் நாகேந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்க உள்ளார். இக்கூட்டங்களில், பா.ஜ.,வை சேர்ந்த பல்வேறு பொறுப்பாளர்கள், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.