/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேப்பனஹள்ளியில் மழையின்றி வறட்சி டிராக்டர் மூலம் மா மரங்களுக்கு தண்ணீர்
/
வேப்பனஹள்ளியில் மழையின்றி வறட்சி டிராக்டர் மூலம் மா மரங்களுக்கு தண்ணீர்
வேப்பனஹள்ளியில் மழையின்றி வறட்சி டிராக்டர் மூலம் மா மரங்களுக்கு தண்ணீர்
வேப்பனஹள்ளியில் மழையின்றி வறட்சி டிராக்டர் மூலம் மா மரங்களுக்கு தண்ணீர்
ADDED : ஏப் 01, 2024 04:07 AM
கிருஷ்ணகிரி: வேப்பனஹள்ளியில் மழையின்றி தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், டிராக்டர் மூலம் மா மரங்களுக்கு தண்ணீர் ஊற்றி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், வேப்பனஹள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன் பெய்த பருவமழையால், பல ஆண்டுகளாக காய்ந்திருந்த மார்க்கண்டேயன் நதி, குப்தா நதி மற்றும் சுற்றுவட்டாரத்திலுள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் நிரம்பின. இதனால் கடந்த, 2019 முதல், 2023 வரை இப்பகுதியில் குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீர் போதுமான அளவில் இருந்தது. ஆண்டுதோறும் டிச.,ல் பெய்யும் பருவமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பும் என எதிர்பார்த்த நிலையில், கடந்த டிச.,ல் பருவ மழை குறைந்து, மார்கண்டேயன் மற்றும் குப்தா நதிகள் வறண்டு, நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், வேப்பனஹள்ளியில் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் பற்றாக்குறையால், வேப்பனஹள்ளி அருகே ஜெகநாதபுரம் கிராமத்தில், நீரை விலைக்கு வாங்கி, டிராக்டர் மூலம் தண்ணீர் கொண்டு வந்து, மாமரங்களுக்கு ஊற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றும், 2 மாதங்கள் கடும் வெயில் இருக்கும் என்பதால், விவசாயத்திற்கும், குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

