/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 03, 2024 07:31 AM
ஊத்தங்கரை : ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டையில், அ.தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். கட்சியின் துணைப் பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி ரிப்பன் வெட்டி தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ஜூஸ் வழங்கினார். இதில், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., கிருஷ்ணமூர்த்தி, லோக்சபா வேட்பாளர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், நகர செயலாளர் ஆறுமுகம், சிங்காரப்பேட்டை ஊராட்சி செயலாளர் சங்கர்நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.